எமதூர்களாகிய அபுக்காகம, கனுக்கெட்டிய பற்றி ...
'அபுக்காகம' என்பது, அவக்கந்தளுவ, கனுக்கெட்டிய, களுவாச்சிகம, முடத்தவ ஆகிய சிறு கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு சுமார் 600 குடும்பங்கள் ஒரு ஜுமுஆப்பள்ளிவாசலினது நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையினால் நிர்வகிக்கப்படுகின்றன. இப்பிரதேசம் குடியிருப்புப் பிரதேசமாக 2.6 சதுர கிலோமீற்றர்களையும் விவசாய நிலங்களாக 1.3 சதுர கிலோமீற்றர்களையும் கொண்டுள்ளது.
எமது ஊரானது வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் வன்னி ஹத்பத்துவ மாகுல் மெதகன் தஹய மேற்குக்கோரளை, நிரவெரடிய பிரதேச சபை ரஸ்நாயக்கபுர பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் உள்ள ஊர்களோடு ஒப்பிடுகையில் பழைமை வாய்ந்த கிராமமாகவும் எமதூர் திகழ்கிறது.
இது காலம் காலமாகத் தனித்துவங்கள் பலவற்றை பேணிப்பாதுகாத்து வரும் கிராமமும் ஆகும். இங்கு நேரடியாக அரேபிய வம்சாவழியினைக் கொண்ட முஸ்லிம் குடியேற்றம் ஆரம்பமானது சிறப்பிற்குரிய விடயமாகும்.
புத்தளம் மாவட்டத்தின் எல்லைக்கு அருகாமையில் அமைந்திருப்பதோடு, குருநாகல், புத்தளம், சிலாபம், கல்கமுவ, மஹவ போன்ற பிரதேசங்களுக்கு இலகுவாகப்பயணிக்கக்கூடிய அமைப்பிலும் அமைந்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் எல்லைக்கு அருகாமையில் அமைந்திருப்பதோடு, குருநாகல், புத்தளம், சிலாபம், கல்கமுவ, மஹவ போன்ற பிரதேசங்களுக்கு இலகுவாகப் பயணிக்கக்கூடிய அமைப்பிலுமுள்ளது.
'அபுக்காகம' என்ற நாமம் உதித்ததற்கு மூன்று வகையான வரலாற்றுச் சம்பவங்கள் எமதூர் மூதாதையரிடமிருந்து
அறியக்கூடியதாய் உள்ளது.
1. அபூ காக்காகே கம
எமதூரில் ஆரம்பத்தில் 'அபூ' என்பவர் காயல்பட்டிணத்திலிருந்து வந்து குடியிருந்ததாகவும் அவருக்கே இப்பகுதி நிலங்கள்
சொந்தமாக இருந்ததாகவும் இதனாலேயே அபூ காக்காகே கம என்ற பெயர் உண்டானது எனக் கூறுகின்றனர்.
2. அபூபக்கர்கே கம
எமதூரில் அபூபக்கர் என்பவர் வாழ்ந்ததாகவும் அவருக்கே எமதூரின் நிலங்கள் சொந்தமாக இருந்ததாகவும் அதனால் அபூபக்கருடைய
ஊர் அபூபக்கர்கே கம என்றழைக்கப்பட்டது. பின்பு அது திரிபடைந்து அபுக்காகம என வந்ததாகவும் கூறப்படுகின்றது.
3. ஹா பொக்கா கம
மூன்றாவது கருத்தே ஊரிலுள்ள அதிகான பெரியோர்களாலும் மூதாதையராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கருத்து ஏனைய
கருத்துக்கள் போலல்லாது வராலற்றுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதாலும் முன்னைய இரு கருத்துக்களுக்கும்
ஆதாரங்கள் இல்லை என்பதாலும் மூன்றாவது கருத்தே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எமது மூதாதையர்களின் ஆரம்பக்குடியேற்றமானது ரத்தம்பலா ஓயாவை (மடுவடி) மையப்படுத்தி எழுந்ததனால் 'அவக்கந்தலுவ' எனப்பட்டது. இப்பெயரானது கடந்த 200 வருட காலத்துக்கு மேலாக அழைக்கப்பட்டு வருகிறது.
அது போன்றே எமது ஊரானது அரசாங்க ஆவணங்களில் 'பகலவீரதடான' என்றழைக்கப்பட்டது. இவ்வழமை இன்றும் உள்ளது. பலரின் அடையாள அட்டை முகவரியிலும் பிறப்புச்சான்றிதழ்களிலும் இப்பெயரையே காணலாம். எமதூரின் பெயரான 'அபுக்காகம' என்பது கடந்த 50 வருடங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இப்பெயர் அவக்கந்தலுவ குளம் சார்ந்த நிலப் பிரதேசங்களையே குறித்து நிற்கிறது எனப் பெரியோர் கூறுவர். எனினும், எமது பாடசாலை, பள்ளிவாசல் நிர்வாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 'அபுக்காகம' எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றது.
எமதூருக்கு கனுக்கெட்டிய என்ற பெயர் வருவதற்கு ஒரு காரணம் உள்ளது. A-10 பாதையில் பயணித்த வியாபாரிகள் மாட்டு வண்டிகளை நிறுத்தி ஓய்வெடுத்ததோடு, மாடுகளையும் புல் மேய்வதற்காக அவ்விடத்தில் கட்டினர். இச்சந்திக்கு அருகில் முடத்தவ குளம் காணப்படுவதால் இவ்விடம் அவர்களின் சகல தேவைகளுக்கும் சாதகமாய் அமைந்திருந்தது. முற்காலத்திலிருந்தே இவ்விடத்தில் கடைகளும் இருந்துள்ளன. எனவே மாடுகளை ‘கம்பங்களில் கட்டுதல்’ (கணுவில் கட்டுதல்) என்ற சொற்றொடர் ‘கனுக்கெட்டிய’ என திரிபடைந்திருக்கலாம் என்பதே பொதுவான அபிப்பிராயம்.
கனுக்கெட்டிய பிரதேசக் காணிகள் மாற்றுமதத்தினருக்கே உரித்தாகக் காணப்பட்டன. பின்பு எமதூர் மக்களால் அவை கொள்வனவு
செய்யப்பட்டன.
தென்னிந்திய முஸ்லிம் வியாபாரிகள் இங்கு வாழ்ந்தனர். சுல்தான் காகா, அஸனார் முதலாளி, ஹகீம் ஸா, யூசுபு (தோல் சாப்பு )
போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பெற்றோல் நிரப்பும் நிலையம் காணப்பட்டது.
நெல் மாற்றும் கொப்பரா ஆலைகள் காணப்பட்டன.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி கனுக்கெட்டிய - கொழும்பு சேவையில் ஈடுபட்டிருந்தது.
1. ராஜகோபால முதியன்சேலாகே
இப்பரம்பரையினர் யூனானி வைத்திய முறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். இவ்வாறு மன்னர்களோடு மிக
நெருக்கமானவர்களாக இருந்த காரணத்தினால் ராஜ கருணா, கோபால முதியலாகே, ராஜகோபால முதியலாகே (Raja Karuna
Gopala Muthiyalage, Rajagopala Muthiyalage) என்ற பரம்பரைப் பெயர்களைக் கொண்டு கௌரவமாக
அழைக்கப்பட்டனர்.
2. ராஜ வன்னி உன்னெஹேலாகே
வடமேல் மாகாணத்தின், குறிப்பாக புத்தளம் மாவட்டத்தின் பழைய நிர்வாக அலகின் கீழ் குமார வன்னிப் பற்று, இராஜ வன்னிப் பற்று
போன்ற உப நிர்வாக அலகுகள் காணப்பட்டன. இவற்றில் பண்டைய மன்னர்கள் வன்னியர்களை நிர்வாகிகளாக நியமித்தனர்.
இவ்வாறான இவ்வாறான பரம்பரைப் பெயருடையவர்கள் எமதூரில் இருக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில்
இவர்கள் இன்றும் வாழ்கின்றனர்.
3. கம் ரதல முதியன்சேலாகே
19ம் நூற்றூண்டின் பிற்பகுதி வரைக்கும் மன்னராட்சி காலத்தில் எமது நாட்டில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
இத்துறையை அபிவிருத்தியோடு திறம்படச் செய்வதற்கும் சில அதிகாரிகளை மன்னர்கள் நியமித்தனர். இவர்களின் கண்காணிப்பில்
நான்கு அல்லது ஐந்து சிற்றூர்கள் இருந்தன. இவ்வதிகாரிகள் சமூகத்தில் நன்மதிப்புடையோராயும் அதிக நிலப்பரப்புகளை தமக்கு
சொந்தமாகக் கொண்டோராயும் இருந்தனர். இவர்கள் 'கம்ரதல' என்று அழைக்கப்பட்டனர். எமதூரில் முன்னர் காணப்பட்ட காணி
உறுதிகளைப் பார்க்கையில் 'கம்ரதல' பரம்பரையினரின் பெயர்களை அதிகம் காணக்கூடியதாய் உள்ளது.
4. மடிகே முதியன்சேலாகே
இப்பரம்பரைப் பெயரானது இலங்கையின் தலைநகரமாக குருநாகல் காணப்பட்டபோது போக்குவரத்துத் துறைக்கு
பொறுப்பாக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

முதல் கருத்து
ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் இலங்கைக்கு மரத்தினால் செய்யப்பட்ட வள்ளங்கள் மூலமே வந்தனர். இவர்கள் மரக் கலங்கள்
மூலமே வந்தனர். இவர்கள் மரக் கலங்கள் கட்டும் முறையையும் அவற்றின் மூலம் கடற் பிரயாணம் செய்வது எப்படி என்பதனையும்
ஏனைய மக்களுக்கு அறிமுகப்படுத்தியதால் 'மரக்கலயா' அல்லது 'மரக்கல மினிஸ்ஸு' என்று அழைக்கப்பட்டனர்.
இரண்டாம் கருத்து
இரண்டாம் இராஜ சிங்க மன்னனை எதிரிகள் துரத்தி வந்தபோது அம்மன்னன் மரப்பொந்தில் ஒளிந்துகொண்டான். அதனை
அங்கிருந்த முஸ்லிம் பெண்ணொருத்தி கண்டுவிட்டாள். மன்னரைத்துரத்தி வந்த எதிரிகள் வற்புறுத்திக் கேட்டும் அவள் மன்னனை
காட்டிக்கொடுக்கவில்லை. எனவே அப்பெண்ணை எதிரிகள் கொன்றுவிட்டனர். மன்னன் 'மாவ ரெக்க மெயாலா' (என்னைக்
காப்பாற்றியது இவளே) என்றான். இவ்வார்த்தையே 'மரக்கலயா' என்று திரிபடைந்துள்ளது.
மூன்றாம் கருத்து
ராஜகோபால முதியன்சேலாகே என்ற குடும்பப் பெயருடைய முஸ்லிம் இருவர் கீர்த்தி ஸ்ரீ இராஜ சிங்கனுக்கு (1747-1781)
மெய்ப்பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்கள் உருவத்தில் அரேபியர்களைப் போன்றிருந்தனர். இம்மன்னனோடு இருந்த சில
அமைச்சர்கள். பிக்குகள் மற்றும் சிலர் இணைந்து மன்னனைக் கொல்வதற்காக சதிசெய்தனர். மன்னன் அமரும் ஆசனத்துக்குக் கீழ்
பெரிய குழியொன்றை வெட்டி அதனை வாழை மரப்பட்டைகளால் அலங்கரித்திருப்பது போல் செய்திருந்தனர். இச்சதியை தமது
புத்திக்கூர்மையால் இவ்விருவரும் அறிந்து மன்னனின் உயிரைக் காப்பாற்றினர். அச்சந்தர்ப்பத்தில் 'என்னைக் காப்பாற்றியவர்கள்
இவர்கள்' (மாவ ரெக்கே மெயாலா) என்று அரசன் கூறிய வார்த்தைகளே 'மரக்கலயா' என திரிபடைந்துள்ளது.
எமது முழு ஊரையும் திகிலூட்டிய ஒரு நிகழ்வு, 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி அரங்கேறியது. வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வொன்றை எமது ஊர் சந்தித்தது. 'ஜே.வீ.பீ.' கிளர்ச்சிக்குழுவின் பிரச்சினை என ஊரார் இதனை நினைவில் வைத்துள்ளனர்.
1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி மாலை ஏழு இருபது மணி. மக்கள் இஷாத்தொழுகைக்காக ஜுமுஆ பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளை அது. திடீரென ஆயுதம் தாங்கிய குழுவொன்று ஜுமுஆப் பள்ளி வளாகத்தினுள் பலாத்காரமாக நுழைந்து அங்கிருந்த ஊர் மக்களை ஒன்று சேர்த்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, பள்ளியினுள் அடைத்து விட்டனர்.
மக்களுடன் மிகக் கடுமையாக நடந்து கொண்ட அவர்கள் தமது கொள்கை, கோட்பாடுகளை மக்களுக்கு திணிக்கும் விதமான உரை நிகழ்த்தினர். அக்கால முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரங்களை விமர்சித்ததோடு, ஊரிலுள்ள துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகளை சேகரித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், ஊரிலுள்ள கணிசமான தொகைப் பணத்தை சேகரித்துத் தர வேண்டுமெனவும் வற்புறுத்தினர்.
வேறு வழியின்றி இரவோடு இரவாக துப்பாக்கி ரவைகள் சேகரித்துக் கொடுக்கப்பட்டன. இரண்டு மூன்று நாட்களில் பணமும் வசூலித்துத் தருவதாக ஊர் மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதன் பிரகாரம் மூன்று நாட்களுக்கு சுமார் முப்பத்து எட்டு ஆயிரம் ரூபாய் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் சேகரித்துக் கொடுக்கப்பட்டது.
எமதூரின் ஆரம்பப் பள்ளிவாசலானது கி.பி. 1906ஆம் ஆண்டு ரத்தம்பல ஓயவுக்கு மடுவடி அருகில் ஸ்திரமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. எமதூரை அண்டிய முஸ்லிம் கிராமங்களிலிருந்து ஜுமுஆத் தொழுகைக்காக இப்பள்ளிவாசலுக்கே வருகை தந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
1. ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்
மௌலவி ஏ.எம். ஜுனைத்
2. ஹாபிளுல் குர்ஆன்
மௌலவி ஐ. ஷகூர் (இன்ஆமி)
3. ஆலிம் மௌலவி
எஸ். ஹாஜா மொஹிதீன் (தப்லீகீ, பின்னூரி)
4. மஸ்ஜித்
1906 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜித்
5. ஆரச்சியார்
எம். பி. சேகுத்தம்பி
6. விவாகப் பதிவாளர்
எம். பி. சேகுத்தம்பி
7. கிராம சபை உறுப்பினர்
எம். பி. சேகுத்தம்பி
8. தபால் திணைக்கள உத்தியோகத்தர்
ஐ. அபுசாலிஹு
9. எமதூர்ப்பாடசாலையின் மாணவன்
எஸ். எல். உதுமா லெப்பை
10. எமதூர்ப்பாடசாலையின் மாணவி
என். பீ. ஆமினா உம்மா
11. முது கலைமானி்
ஏ.எம். பாகிர்
12. முது வர்த்தகமானி்
ஓ. எம். ஜாபிர்
13. பட்டதாரி ஆசிரியர்
என். எல். எம். அபுல் பஸார், ஓ.எம். ஜாபிர்
14. பொலிஸ் சேவையில் இணைந்தவர்
எம். சுபைர்
15. மின்சார சபை உத்தியோகத்தர்
ஆர்.எம். ஸவாஹிர்
16. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்
யூ.எல் .கொலிசன் பீபி
17. நாடக ஆசிரியர்
ஏ.ஜீ. பழீல்
18. இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்
ஓ.எம். ஜாபிர்
19. இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்
ஐ.எம். அலி ஜின்னா
20. வைத்தியர்
எஸ்.ஏ. அஸ்கர்தீன்
21. சட்டத்தரணி
எஸ்.எம். அஸீம்
22. மாகாண சபைக்குப் போட்டியிட்டவர்
ஏ.எல். ரபாய்தீன்
23. ஆசிரியர்
ஆர்.எம்.யூ. சுலைமான் லெப்பை
24. அதிபர்
ஆர்.எம்.யூ. சுலைமான் லெப்பை
25. அரபுக்காலாசாலைப் பணிப்பாளர்
மௌலவி எஸ். ஹாஜா மொஹிதீன் (தப்லீகீ, பின்னூரி)
26. அரபு மொழி ஆசிரியர்
ஏ. ஜுனைதீன்
27. சர்வதேச ஸ்தாபனத்தில் கடமை புரிந்தவர்
மௌலவி இஸட்.ஏ.எம். நவாஸ்
28. நளீமிய்யா கலாபீடத்தில் பட்டம் பெற்றவர்
ஐ.எம். அலி ஜின்னா
29. சங்கம்
அந்நூர் கிராம அபிவிருத்திச் சங்கம்
30. சங்கம்
அந்நூர் கிராம அபிவிருத்திச் சங்கம்
31. தமிழ்த்துறை சிறப்புப் பட்டம்
ஏ.எம். பாகிர்
32. அரசியல்துறை சிறப்புப் பட்டம்
ஐ.எஸ். ஸாஜஹான்
33. நூல் வெளியீடு
மௌலவி இஸட்.ஏ.எம். நவாஸ்
About Us

Our College situated in the quiet village of Kanuketiya,
belonging to the electorate of Nikaweratiya in the district
of Kurunegala of the North western province of Sri Lanka
humbly stands Zaid Bin Sabith Arabic College, 500 meters away from the
Kanuketiya junction about 575 Muslim families live in the rural village.
Our Request
This College has been 16 years of service by the help of Allah. Alhamdhu Lillah.
Throughout many generous and kind philanthropist have given us financial and material help to realize the needs of the College still there are many more shortcomings and necessities, especially the daily, monthly and annual expenses as well as the maintenance expenditures of the building and land.
As such we humbly request you to please grant your kind attention to our College and give us whatever possible donations. In Sha Allah Allah will grant and fulfil all your needs.
Allah says in the Holy Qur'an "The parable of those who spend their wealth, in the way of Allah" is that of a grain of corn, it growth seven ears, and each ear hath a hundred grains. Allah giveth manifold increase to whom He pleaseth; And Allah careth for all and He knoweth all things. (01:261)
Please note: Those wishing to make donations are requested to please fill in the form attached herewith and hand it over to the College Authorities.
Like us on Facebook
Like us on Facebook
Meet us on Google+